கிறிஸ்து பி்றப்பிற்கு முன்பே விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா?
வட மத்திய கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 500 முதல் கி.மு 800 காலத்தை சேர்ந்த தங்க நகைகள் நவீன கால விமானங்களை குறிப்பது போல் உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதுகொலம்பியாவில் உள்ள Magdalena என்ற ஆற்றின் அருகே இந்த நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் ரைட் சகோதர்ர்களால் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அறிந்தாலும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் பூமிக்கான தொடர்பு பற்றி நிலவும் மர்மங்கள், இந்த நகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது அந்த காலத்தில் மக்கள் பார்த்த விமானங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால் அறிவியல் அறிஞர்கள் இதனை ஏற்கவில்லை. ஆதாரம் எதுவும் இல்லாததாலும் அந்த நகைகள் விமானங்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அவை மீன் அல்லது வேறு எதும் உயிரினத்தை பார்த்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
ஆனால் அதன் உருவ அமைப்பை பார்த்தால் நவீன கால விமான்ங்களின் சாயல் அப்படியே உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
அந்த நகை வடிவம், விமானத்தை போலவே முன் பக்கம் கூர்மையாகவும், இடது மற்றும் வலது பக்கங்களில் சம அளவு உள்ள இறக்கைகளையும் கொண்டுள்ளது.
மேலும், பின் பக்கத்தில் இரண்டு சிறிய இறக்கை போன்ற அமைப்புகளும், கடைசியாக பின்புறம் ஒரு துடுப்பு போன்ற அமைப்பையும் பெற்றுள்ளது.
அடிப்படையில் மீனை போல் தோன்றினாலும், எவ்வகை மீனுக்கும் இவ்வாறான இறக்கைகள் இல்லை என்பதால் அந்த காலத்து மனிதர்கள் எதனை பார்த்து இந்த வடிவத்தை வடிவமைத்தனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இதுமட்டுமல்லாமல், எகிப்து உள்ளிட்ட பல இடங்களில் வரையப்பட்ட ஓவியங்களிலும் அல்லது செதுக்கப்பட்டுள்ள சிலைகளிலும், நவீன காலத்தில் விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் விண்கலன்கள் போன்ற அமைப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள வேதங்களிலும் விமான சாஸ்திரம் என்ற நூலிலும், அந்த காலத்திலேயே பறக்கும் பொருட்களை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பலதரப்பட்ட இடங்களில் விமான்ங்கள் பற்றிய தகவல்கள் படங்கள், சிலைகள் இருந்தாலும் அவை உண்மையாகவே நவீன கால விமான்ங்கள் போல் செயல்பட்டனவா? வானத்தில் பறந்தனவா? ஓரிடத்திலிருந்து வேறிடம் செல்ல முடிந்ததா? என்ற கேள்விகளுக்கு ஆதாரத்துடன் பதிலளிக்க யாராலும் முடியவில்லை.
எனினும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், உண்மையிலேயே வேற்றுக்கிரகவாசிகள் விமானங்களை பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது என்று நம்புகின்றனர்.
கிறிஸ்து பி்றப்பிற்கு முன்பே விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா?
Reviewed by Author
on
February 05, 2016
Rating:
Reviewed by Author
on
February 05, 2016
Rating:



No comments:
Post a Comment