அண்மைய செய்திகள்

recent
-

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோடு(EU) , பிரித்தானியா பிரிவதா இல்லையா : என்பது தொடர்பான கணிப்பு வெளியாகியது !

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோடு(EU) , பிரித்தானியா ஒன்றிணைந்திருப்பதா. இல்லை பிரிந்து செல்வதாக என்ற மக்களின் கருத்துக் கணிப்பு வரும் ஜூன் மாதம் 23 நடைபெறவுள்ளது. இன் நிலையில் பிரித்தானியாவில் உள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பல்வேறு ஊடகங்கள் தமது கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் , 51% சதவிகிதமான பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரியக் கூடாது என்றும். 39% விகிதமான மக்கள் பிரியவேண்டும் என்றும் , 10 சதவிகிதமான மக்கள் என்ன செய்வது என்று முடிவெடுக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதில் ஒரு பெரும் பிரச்சனை இருக்கிறது. அது என்னவென்றால். ஐரோப்பிய ஒன்றியத்தோடு நாம் இணைந்திருக்கவேண்டும் என்று கருதும் இந்த 51 சதவிகிதமான மக்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வந்து தமது வாக்குகளை போட மாட்டார்கள். ஆனால் பிரிய வேண்டும் என்று நினைப்பவர்களே மிகவும் தீவிரமாக வந்து வோட்டு போடுவார்கள்.

மேலும் முடிவு எடுக்காமல் உள்ள 10 சதவிகித மக்கள், இறுதி நேரத்தில் பிரியவேண்டும் என்ற முடிவை எட்டக் கூடும். ஏன் எனில் லண்டன் மக்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்ற லண்டன் மேயரான பொறிஸ் ஜோன்ஸ்சன் அவர்கள், பிரித்தானியா பிரியவேண்டும் என்று தனது முடிவை அறிவித்து விட்டார். இதனால் டேவிட் கமரூனுக்கு பெரும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. பொறிஸ் ஜோன்ஸ்சன் தனது பதவியை தக்கவைக்கவும். வருங்காலத்தில் கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகி. இன் நாட்டின் பிரதமராக , இவ்வாறு பேசிவருகிறார் என்று பிரதமர் டேவிட் கமரூன் பெரும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதனால் பெரும் சிக்கல் தோன்றியுள்ளது. அவர் கட்சியிலெயே அவருக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மூத்த கான்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள், தற்போது டேவிட் கமரூனுக்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

இதனால் திரி சங்கு சொர்கத்தில் சஞ்சரிக்கிறார் டேவிட் கமரூன். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரியுமே ஆனால், லண்டனில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மீண்டும் தனது சொந்த ஐரோப்பிய நாடுகளுக்கு திரும்பிச் செல்ல நேரிடும். மேலும் பல லட்சக் கணக்கான , றொமேனியர்கள், போலந்து நாட்டவர், லித்துவேனியர்கள், துருக்கியர்கள், பிரித்தானியாவில் இருந்து உடனே வெளியேற்றப்படுவார்கள். இது ஒருவகையில் பிரித்தானிய மக்களுக்கு நல்லது. அன் நாட்டில் உள்ள மக்களுக்கு , அது பெரும் சுமையைக் குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால் இது நடக்குமா ? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது...

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோடு(EU) , பிரித்தானியா பிரிவதா இல்லையா : என்பது தொடர்பான கணிப்பு வெளியாகியது ! Reviewed by NEWMANNAR on February 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.