முருங்கன் மற்றும் சிலாபத்துறை முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கிடையில் இடையில் கைகலப்பு.(படங்கள் இணைப்பு)
முருங்கன் மற்றும் சிலாபத்துறை முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கிடையில் நேற்று வியாழக்கிழமை மாலை முருங்கன் முச்சக்கர வண்டி தரிப்பிடப்பகுதியில் ஏற்பட்ட பாரிய கைகலப்பு முருங்கன் பொலிஸாரின் தலையீட்டினால் சுமூகமான நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
இச்சம்பவசம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
முசலி பிரதேசத்தில் இருந்து தூர இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் மாலையில் மீண்டும் முசலி பிரதேசத்தில் உள்ள தமது கிராமங்களுக்குச் செல்வதற்காக முருங்கன் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளை பயண்படுத்தி தமது சொந்த இடங்களுக்கு செல்கின்றனர்.
எனினும் முருங்கன் பஸார் பகுதியில் இருந்து முசலி பிரதேசத்தில் உள்ள கிராமங்களுக்குச் செல்லுவதற்காக அந்த மக்கள் முருங்கன் பகுதிக்கு வருகின்ற சிலாபத்துறை முச்சக்கர வண்டிகளிலே தமது பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.
குறித்த நடவடிக்கைகளை முருங்கன் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தனர்.
இதனால் சில தினங்களாக முருங்கன் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும்,சிலாபத்துறை முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் இடையில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை இரு தரப்பினருக்கும் இடையில் பாரிய கைகலப்பாக மாறியது.
உடனடியாக முருங்கன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் முருங்கன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை சுமுகமாக தீர்த்து வைத்தனர்.
(மன்னார் நிருபர்)
(11-2-2016)
முருங்கன் மற்றும் சிலாபத்துறை முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கிடையில் இடையில் கைகலப்பு.(படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
February 12, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 12, 2016
Rating:






No comments:
Post a Comment