அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும்- மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்.(படங்கள் இணைப்பு)


வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நாடாளாவிய ரீதியில் இடம் பெற்று வந்த கருத்தறியும் விசேட அமர்வுகள் இன்று வியாழக்கிழமை (11) இரண்டாவது நாளாகவும் மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் இடம் பெற்றது.

-இதன் போது இன்று வியாழக்கிழமை மாலை வருகை தந்த மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன்,மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உற்பட  ஒன்றியத்தின் பிரதி நிதிகலான அருட்தந்தையர்கள்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-இதன் போது கலந்து கொண்டு   கருத்து வெளியிடும் போதே குறித்த ஒன்றியத்தின் தலைவர் விஸ்.சிவகரன் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,,,


கடந்த ஆறு தசாப்தத்திற்கு மேற்பட்ட இனமுரண்பாட்டு சமத்து வமின்மை சனநாயக அத்துமீறல் அடக்கி ஆளும் மேட்டிமைத்தனம் எதேச்சதிகார ஏகாதிபத்தியம் சிங்கள பௌத்த நாடு எனும் மேட்டிமைத்தனம் எனும் வாதங்கள் உருவூட்டப்பட்டதன் விளைவே பல இலட்சங்கணக்கான உயிரிழப்புக்களுக்கு காரணமாக அமைந்தது.

பல ஒப்பந்தங்கள் காணாமல் போகச் செய்யப்பட்டன.
வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதனால் நம்பிக்கையற்றவர்களாகி விட்ட நிலையே காணப்படுகின்றது.


எனவே எதிர்காலத்தில் ஐக்கிய இலங்கைக்குள் சமச்சீரான அதிகாரப் பரவலாக்க முறையினூடாக எங்களை நாங்கள் ஆழுகி;றவர்களாக வடகிழக்கு தாயகம் தேசியம் தன்னாட்சி சுயநிர்ணயம் ஆகிய உரிமைகள் தன்னகத்தே கொண்ட சிறப்பதிகார அலகு பூரண சமஷ்டி அதிகார முறைமை உதாரணம் சுவிஸ், கொசோவா போன்ற நாடுகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்புப் போல் வரன் நெறிமுறை நீதி தவறினால் இணைந்து வாழ்தல் என்பது குந்தகம் ஏற்படும் எனவே சுதந்திர வாழ்வுரிமைக்காகப் போராடிய இனம் சமஷ்டி கோருவது எந்த வகையிலும் தவறாக முடியாது.

ஆகவே வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு வடகிழக்கு தமிழ் மாநில அரசாக்கப்பட்டு அங்கு வாழும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இணையான அதிகார பங்கீடு வழங்குவதுடன் அவர்களது தனித்துவ நிர்ணயியலையும் உள்ளீர்ததுக் கொள்வது அவசியமாகும்.

அத்துடன் இந்தியாவின் காஸ்மீர் மாநிலத்திற்கு இந்திய மத்திய அரசாங்கம் சிறப்பு அந்தஸ்து வழங்கியது போல் வடகிழக்கு பகுதிக்கும் வழங்குவதுடன் இல்லையேல் பிரித்தானிய ஆதிக்கத்தில் உள்ள ஸ்கொட்லாந்திற்கு உள்ள தனித்து இராட்சிய அங்கீகாரத்தையாவது வழங்க வேண்டும்.

எனவே சிங்கள மக்கள் சமஷ்டி முறையில் அரசியல் யாப்பு உருவாக்கத்தை தடுப்பார்களாயின் மறுபடியும் பிரிவினைவாதம் மேலெழக் கூடிய ஏதுவான நிலை தோன்றலாம் இதை சிங்கள தேசம் புரிந்து கொள்ள வேண்டும்.

என மேலும் தெரிவித்தார்.மேலும் கோரிக்கை அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





(மன்னார் நிருபர்)

(11-2-2016)







வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும்- மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்.(படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on February 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.