சுதந்திர தின நிகழ்வுகளில் சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்பு- மகிந்த அணி புறக்கணிப்பு
இலங்கையின் 68வது சுதந்திரதின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சுதந்திர நாள் நிகழ்வில் முதற்கட்ட நிகழ்வுகள் காலிமுகத் திடலில் இன்று காலை 8.45 மணியளவில் .ஆரம்பமாகின.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, மகிந்த தரப்பு அணியினர் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.
இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வை தமிழர்கள் நீண்ட காலமாகவே புறக்கணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கடந்த வருடம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றமை குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திர நாள் நிகழ்வில் முதற்கட்ட நிகழ்வுகள் காலிமுகத் திடலில் இன்று காலை 8.45 மணியளவில் .ஆரம்பமாகின.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, மகிந்த தரப்பு அணியினர் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.
இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வை தமிழர்கள் நீண்ட காலமாகவே புறக்கணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கடந்த வருடம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றமை குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தின நிகழ்வுகளில் சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்பு- மகிந்த அணி புறக்கணிப்பு
Reviewed by NEWMANNAR
on
February 04, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 04, 2016
Rating:

No comments:
Post a Comment