மன்னார் நகர சபையினால் புதிய கடைத்தொகுதி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு --09-03-2016
மன்னார் நகர சபைக்கான NELSIP திட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் எட்டு கடைகளைக்கொண்ட கடைத்தொகுதி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 09-03-2016 காலை 10.00 மணியளவில் மன்னார் பிரதான நகரின் தனியார் பேரூந்து நிலையத்திற்கருகாமையில் மன்னார் நகர சபையின் செயலாளர் திரு.X.L.றெனால்ட் தலைமையில் வைபக ரீதியாக இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சர்வமத குருக்கள் மன்னார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தனியார் பேரூந்து நிலைய நிர்வாக பிரதிநிதிகள் ஆகியோருடன் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இணைந்து கொண்டனர்.
முதலில் சர்வமத குருக்களின் வழிபாடுகளினைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டோரால் அடிக்கல் நாட்டல் நிகழ்வு வைபக ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மேலும் இக்கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணியானது மன்னார் வாழ் மக்கள் மற்றும் பல தரப்பட்ட வார்த்தகர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் அவர்கள் நலன் கருதியும் 8 மில்லியன் (80இலட்சம்) ரூபா நிதியொதுக்கீட்டில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தகது.
மன்னார் நகர சபையினால் புதிய கடைத்தொகுதி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு --09-03-2016
Reviewed by Author
on
March 09, 2016
Rating:
Reviewed by Author
on
March 09, 2016
Rating:















No comments:
Post a Comment