சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 8698 பாடசாலை பரீட்சார்த்திகள் சகல பாடங்களிலும் தோல்வி!
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 8698 பாடசாலை பரீட்சார்த்திகள் அனைத்து பாடங்களிலும் சித்தியெய்தவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
9 பாடங்களிலும் இந்த மாணவர்கள சித்தியெய்தவில்லை.
கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து ஏழுநூற்று இருபத்து நான்கு பாடசாலை பரீட்சார்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் 8147 பாடசாலை பரீட்சார்த்திகள் சகல பாடங்களிலும் சித்தியெய்தவில்லை.
இந்த எண்ணிக்கை கடந்த 2015ம் ஆண்டு 557 பேரினால் உயர்வடைந்துள்ளது.
கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை பரீட்சர்த்திகளில் 6102 பேர் 9ஏ சித்தி பெற்றுக்கொண்டிருந்தனர்.
கடந்த 2014ம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை பரீட்சார்த்திகளில் 5271 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதன்படி, கடந்த ஆண்டை விடவும் 831 மாணவர்கள் இம்முறை 9 ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்து நானூற்று எண்பத்தொரு பேர் கணித பாடத்தில் சித்தியெய்தவில்லை. அதாவது 55.18 வீத பரீட்சார்த்திகள் கணித பாடத்தில் சித்தியெய்தவில்லை.
2014ம் ஆண்டில் 44.82 வீதமான பரீட்சார்த்திகள் கணித பாடத்தில் சித்தியெய்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 8698 பாடசாலை பரீட்சார்த்திகள் சகல பாடங்களிலும் தோல்வி!
Reviewed by Author
on
March 30, 2016
Rating:

No comments:
Post a Comment