டோனியே உலகின் சிறந்த ’பினிஷர்’: கோஹ்லி புகழாரம்....
போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் டோனியே உலகின் சிறந்த வீரர் என்று இந்திய துணைத்தலைவர் கோஹ்லி புகழ்ந்துள்ளார்.
ஆசியக்கிண்ண டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகளால் வங்கதேசத்தை வீழ்த்தி 6வது முறையாக ஆசியக்கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இந்திய அணித்தலைவர் டோனி கடைசி நேரத்தில் 6 பந்தில் 2 சிக்சர், 1 பவுண்டரியுடன் 20 ஓட்டங்களை எடுத்தார்.
அந்த நெருக்கடியான நேரத்திலும் சிக்சர் விளாசி வெற்றி தேடித்தந்த டோனியின் செயல் பலரின் பாராட்டையும் பெற்றது.
இந்நிலையில் டோனியே உலகின் சிறந்த ’பினிஷர்’ என்று பாராட்டிய கோஹ்லி, இந்த வெற்றி டி20 உலகக்கிண்ணப் போட்டிக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
டோனியே உலகின் சிறந்த ’பினிஷர்’: கோஹ்லி புகழாரம்....
Reviewed by Author
on
March 08, 2016
Rating:
Reviewed by Author
on
March 08, 2016
Rating:


No comments:
Post a Comment