பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற காணிகள் விடுவிக்கப்படும்....
வடக்கில் பாதுகாப்புக்கு அத்தியாவசியம் என்று கருதப்படும் காணிகளைத்தவிர ஏனையவற்றை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை ஏற்கனவே ஜனாதிபதி பகிர்ந்தளித்துள்ளார் என சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ சமய அலுவல்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
காணி அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
வடக்கில் மக்கள் வசித்துவந்த இடங்களில் இருந்து கடந்த காலங்ளில் இடம்பெற்ற அசாதாரண நிலைமைகள் காரணமாக அவர்கள் அந்த இடங்களைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு காணி உறுதி இருந்தால் அந்த காணிகள் நிச்சயமாக வழங்கப்படும். அவர்கள் இருந்த இடங்களிலேயே மீள் குடியமர்த்தப்படுவார்கள்.
மேலும் கடந்த காலங்களில் பல்வேறு வகைகளில் காணிப்பத்திரங்கள் பல பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தவொரு பத்திரத்திலும் காணி உரித்து உறுதியான பத்திரமாக ஒன்றுமில்லை. இதனால் இந்த காணிகளை பிள்ளைகளுக்கு எழுதவோ வியாபாரத்துக்கு பாவிக்கவோ அல்லது மேல் மாடிகளை கட்டவோ முடியாது.
இதனால் இது தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளார். இந்த குழு காணி தொடர்பான சட்டமூலத்தின் வரைபை தயாரித்து வருகின்றது. எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதமளவில் சட்டவரைபு முன்வைக்கப்படும். அப்போது அதன் நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொள்ளமுடியும்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற காணிகள் விடுவிக்கப்படும்....
Reviewed by Author
on
March 15, 2016
Rating:

No comments:
Post a Comment