பேத்தியை கட்டியணைத்த இறந்துபோன கொள்ளுபாட்டி: ஸ்கேன் பரிசோதனையால் அதிர்ச்சியடைந்த தாய்
இங்கிலாந்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எடுத்த ஸ்கேன் பரிசோதனையில் தனது குழந்தையின் உருவத்தோடு சேர்ந்து, அக்குழந்தையின் கொள்ளு பாட்டியின் உருவம் தெரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் Greater Manchester நகரில் வசித்து வரும் Sacha Rigby (22) என்ற பெண்மணி கருவுற்றிருந்தார்.
18 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், அல்ட்ரா சவுண்ட்(Ultrasound) ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனையில் சென்றுள்ளார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குழந்தையின் முகம் தெரிகிறது, அதன் அருகில் அப்பெண்ணின் இறந்துபோன பாட்டியின் முகம் தெரிந்துள்ளது.
இதுகுறித்து Sacha கூறியதாவது, எனது குழந்தை மற்றும் எனது பாட்டி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
நெருக்கமாக இருக்கும் இந்த புகைப்படத்தினை பார்க்கையில், ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டபடி இருக்கின்றனர் என தெரிகிறது.
இதனை எனது உறவினர்களிடம் காட்டியபோது யாரும் நம்பவில்லை, ஆனால் எனக்கு நன்றாக தெரிகிறது அது எனது பாட்டியின் முகம் தான்.
அவர் கடந்து ஆண்டு மார்ச் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார், குழந்தைகள் மீது கொள்ளை பிரியம் கொண்ட அவர், என்னை மிகவும் அன்போடு கவனித்துக்கொண்டார்.
நானும் அவரைவிட்டு எப்போதும் விலகியதில்லை, தற்போது இதன் மூலம் எனது குழந்தையையும் அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் இந்த பரிசோதனையால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
பேத்தியை கட்டியணைத்த இறந்துபோன கொள்ளுபாட்டி: ஸ்கேன் பரிசோதனையால் அதிர்ச்சியடைந்த தாய்
Reviewed by Author
on
March 31, 2016
Rating:

No comments:
Post a Comment