பிறந்தநாளுக்கு எந்த மாதிரியான கிரீடம் அணியலாம்? எதிர்பார்ப்போடு தேடும் ராணி எலிசபெத்...
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கார்ட்டூன் வடிவில் சித்தரித்து புத்தகம் ஒன்றினை David Cali என்ற எழுத்தாளர் வெளியிட்டுள்ளார்.
மகாராணி எலிசபெத் அவர்கள் வருகிற ஏப்ரல் 21 ஆம் திகதி தனது 90 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.
ராணியின் பிறந்தநாள் என்றால் அரண்மனை களைட்டும், அதிலும் குறிப்பாக அவர் அணியும் ஆடைகளை தவிர, அவர்கள் அணியும் கிரீடம் தான் முக்கியமான ஒன்று.
மிகச்சிறந்த வடிவமைப்புடன் அமைக்கப்படும் இந்த கிரீடம் தான் ராணியாரின் பிறந்தநாளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்.
இந்நிலையில், David Cali என்ற எழுத்தாளர், பிரித்தானிய ராணி எலிசபெத் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு, எந்த வகையான கிரீடத்தை அணியலாம்? என மிகவும் எதிர்பார்ப்போடு ராணியார் தேடுவது போலவும், அதற்கு அரண்மனையின் நகைக்கடைக்காரர்கள், தோட்டக்காரர்கள் மற்றம் ராணியின் பேரக்குழந்தைகளும் தங்களது கருத்துக்களை கூறுவது போன்று கார்ட்டூன் வடிவில் வரைந்து புத்தமாக தயார் செய்துள்ளார்.
இந்த புத்தகம் Royal Collection அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது, இதன் விலை £12.95 ஆகும்.
 
பிறந்தநாளுக்கு எந்த மாதிரியான கிரீடம் அணியலாம்? எதிர்பார்ப்போடு தேடும் ராணி எலிசபெத்...
 
        Reviewed by Author
        on 
        
March 31, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
March 31, 2016
 
        Rating: 






No comments:
Post a Comment