அண்மைய செய்திகள்

recent
-

முஸ்லிம்களைப் புறக்கணித்து விட்டு தமிழ்த் தேசியத் தலைவர்களால் தீர்வு காண முடியாது: ஹக்கீம்....


முஸ்லிம்களின் பிரச்சினை அணுகப்படாத வரையில் வடக்கு, கிழக்கு இணைப்பை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மூன்று பத்தாண்டுகளாக நீடிக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு இணைப்பை முன்மொழிந்தால், முஸ்லிம்களுக்கும் தனி மாகாணம் வழங்கப்பட வேண்டும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களைப் புறக்கணித்து விட்டு, இனப்பிரச்சினைக்கு தமிழ்த் தேசியத் தலைவர்களால் நிரந்தரமான தீர்வைக் காண முடியாது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள்  இந்திய- இலங்கை உடன்பாட்டின் கீழ் 1987ஆம் ஆண்டு ஒரே ஒரு ஆண்டுக்கு என்று மட்டுமே தற்காலிகமாக இணைக்கப்பட்டது.

முஸ்லிம்களின் அபிலாசைகளை கருத்தில் கொள்ளாமல் அந்த இணைப்பு 24 ஆண்டுகளுக்கு நீடித்தது. இது தொடர்பாக கருத்துக்கணிப்பும் நடத்தப்படவில்லை.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது, இந்த இரு மாகாணங்களில் உள்ள மக்களில் மாத்திரம் தங்கியுள்ள விடயமல்ல. இலங்கையில் வாழும் அனைத்து மக்களிலும் தங்கியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வைக் காண முடியாது. சிலர் வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பாக குறுகிய அரசியல் நலன்களுக்காக கருத்து வெளியிடுகின்றனர். ஆனால் இது இராஜதந்திர ரீதயாக அணுகப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களைப் புறக்கணித்து விட்டு தமிழ்த் தேசியத் தலைவர்களால் தீர்வு காண முடியாது: ஹக்கீம்.... Reviewed by Author on March 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.