காங்கேசன்துறை, நடேஸ்வராக் கல்லூரி காணிகளை மக்களிடம் நாளை ஜனாதிபதி கையளிக்கிறார்!
யாழ்.மாவட்டத்திற்கு நாளை வருகைதரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லுரி மற்றும் கட்டுவன் ஆகிய இடங்களில் 235 ஏக்கர் நிலத்தை மீள்குடியேற்றத்திற்காக பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.
வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை, நடேஸ்வராக் கல்லூரி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை மீள்குடியேற்றத்திற்காக கையளிக்க வேண்டும். என தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதுடன், உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் எங்களுi டய நிலத்தை உடனடியாக மீள்குடியேற்றத்திற்கு அனுமதியுங்கள் என யாழ்.குடாநாட்டிலுள்ள 32 முகாம்களில் தங்கியிருக்கும் வலி,வடக்கு மக்கள் தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாளைய தினம் யாழ்.வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடம்பெயர்வுகளை சந்தித்த மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தை நேரில் பார்வையிடுவார்.
அத்துடன், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று மாலை 3மணிக்கு மேற்படி நடேஸ்வரா கல்லூரி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களுடைய காணிகளையும், கட்டுவன்- குரும்பசிட்டி பகுதியில் உள்ள மக்களுடைய காணிகளையும் சேர்த்து சுமார் 235 அளவிலான மக்களுடைய காணிகளை மீள்குடியேற்றத்திற்காக வழங்கிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக விடுவிக்கப்படும் நிலத்திற்குரிய மக்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த வருடத்தின் இறுதியில் விடுவிக்கப்பட்ட 701.5 ஏக்கர் நிலமும் மக்களிடம் நாளை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும். என தெரிவிக்கப்படுகின்றது.
காங்கேசன்துறை, நடேஸ்வராக் கல்லூரி காணிகளை மக்களிடம் நாளை ஜனாதிபதி கையளிக்கிறார்!
Reviewed by Author
on
March 11, 2016
Rating:
No comments:
Post a Comment