அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியா -நோர்தம்டன் தமிழ் பாடசாலையின் 3ம் ஆண்டு விழா -2016 (படங்கள் )

நோர்தம்டன் தமிழ் பாடசாலையில் 5.3.2016 அன்று 3ம் ஆண்டு விழா  தலைவர் அ.விஜயகுமார் ஒருங்கிணைப்பில்  தலைமை  ஆசிரியர் ஜெப்ரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

இவ்  விழாவின் பிரதம  விருந்தினராக நோர்தம்டன் பாராளுமன்ற உறுப்பினர் David  Mackintosh அவர்களும்,சிறப்பு விருந்தினராக தமிழர் மேம்பாட்டு பேரவை .பிரித்தானியா ,பொறுப்பு வாய்ந்த உத்தியோகஸ்தர் திருமதி.தங்கேஸ்வரி கெங்காதரன் ,அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

விழாவில் ஐக்கிய இராச்சிய மட்டத்தில் தமிழ் மொழிப் பரீட்சையில் அதிதிறன் புள்ளிகளை (90-100) பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.மற்றும் ஐக்கிய இராச்சிய மட்டத்தில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பும் வழங்கப்பட்டது.மேலும் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது .பின்னர் பாடசாலை நலன் விரும்பிகள்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மூத்த கலைஞரான முன்னாள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் உத்தியோகத்தருமான கலாபூசணம் திரு.G .P .வேதநாயகம் அவர்களின் நெறியாள்கையில் பிறந்த மண் எனும் நாடகமும் பரமார்த்த குரு எனும் தலைப்பில் வில்லுப்பாட்டும் மேடையேற்றப்பட்டது.இவ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார் அறிவிப்பாளர் திருமதி.R .கௌரி அவர்கள்.





























































பிரித்தானியா -நோர்தம்டன் தமிழ் பாடசாலையின் 3ம் ஆண்டு விழா -2016 (படங்கள் ) Reviewed by Admin on March 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.