அண்மைய செய்திகள்

recent
-

விசேட செயலணி மூலம் சிறுவர் தஸ்பிரயோகத்தை தடுக்க நடவடிக்கை!


வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் சிறுவர் தஜ்பிரயோகத்தை தடுக்க விசேட செயலணி மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற சிறுவர் தஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை விசேட செயலணியொன்றும் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்தமைக்குரிய காரணங்கள், அதனைத்தடுக்க மேற்கொள்ளக்கூடிய பொறிமுறைகள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கி மாவட்ட மட்ட செயலணி அமைக்கப்பட்டது.

ஏற்கனவே இதுதொடர்பில் அரச அதிபரின் கீழ் செயலணியொன்று செயற்பட்டமையால் அதனை இதன்போது மீள்புனரமைப்பு செய்து வலுவுள்ள செயலணியாக மாற்றப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம்.பி.நடராஜா, மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், துறைசார் திணைக்களங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
விசேட செயலணி மூலம் சிறுவர் தஸ்பிரயோகத்தை தடுக்க நடவடிக்கை! Reviewed by Admin on March 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.