அண்மைய செய்திகள்

recent
-

மடு பிரதேசத்துக்கு உட்பட்ட தம்பனைக்குளப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டச்செய்கைக்குரிய காணிகளில் சட்ட விரோதமாக மண்அகழ்வு

மன்னார் மடு பிரதேசத்துக்கு உட்பட்ட தம்பனைக்குளப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டச்செய்கைக்குரிய காணிகளில் சட்ட விரோதமாக மண் அகழ்வதாகவும் இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கூறியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாநிலையில் அப்பகுதி மக்கள்  நேற்று காலை(  28.03.2016) வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுவின்  இணை  தலைவருமான கெளரவ. இ.சாள்ஸ் நிர்மலநாதனிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டதன் அடிப்படையில்  நேற்று   28.03.2016) பிற்பகல் 4 மணியளவில் அப்பகுதியை பார்வையிட சென்றபொழுது உரிய இடத்தில் டிப்பர் வாகனம் ஒன்று மணல் ஏற்றியக்கொண்டிருந்த நிலையில் அவதானிக்கப்படது.

இதனை தொடர்ந்து அருகிலுள்ள தம்பனைக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு உரிய இடத்துக்கு அழைத்து உரிய வாகனத்தை சோதனையிட்டபோது இப்பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி மண்ணகழ்வு மேற்கொண்டு வாகனங்கள்ளில் ஏற்றப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

 இவ்விடயம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆவணசெய்யுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரிகளை கெளரவ பாரளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். இவ்விடத்திற்கிற்கு மன்னார் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.மடவல்ல வருகைதந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





மடு பிரதேசத்துக்கு உட்பட்ட தம்பனைக்குளப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டச்செய்கைக்குரிய காணிகளில் சட்ட விரோதமாக மண்அகழ்வு Reviewed by NEWMANNAR on March 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.