திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் உடல் கூற்று பரிசோதனைக்கான அறிக்கையில் தாமதம் - அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் மாதிரி கூற்று பரிசோதனை மற்றும் கால அறிக்கையினை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பெற்றுக்கொள்ள காலதாமதம் ஏற்படுவதால், இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கும்படி நீதிபதி உரிய தரப்பினருக்கு கட்டளையிட்டுள்ளார்.
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போதே மன்னார் நீதவான் இவ்வாறு கட்டளையிட்டுள்ளார்.
மன்னார் - மாந்தை, திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எழும்புக்கூடுகளின் மாதிரிகளை, பேரூ, ஆஜந்தினா மற்றும் குவாட்டமாலா ஆகிய மூன்று நாடுகளுக்கும் அனுப்பி கால நிர்ணய அறிக்கையினை பெற்றுக்கொள்ளுவதற்காக குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இருந்த போதும், குறித்த நாடுகளின் தூதுவராலயங்கள் இலங்கையில் இல்லை எனவும், குறித்த நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்த விடயம் சம்பந்தமான அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதன் பின் குறித்த மாதிரிகளை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென மன்னார் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று வெள்ளிக்கிழமை விண்ணப்பங்களை மேற்கொண்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் குறித்த மூன்று நாடுகளின் உதவியை பெறுவதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தங்களினால் உதவ முடியும் எனவும் தெரிவித்தனர்.
அதனையடுத்து நீதிபதியின் கட்டளையின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இது தொடர்பான விடயத்தினை, அது சம்பந்தமான உடல் கூற்று பரிசோதனை மற்றும் கால அறிக்கையினை பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் சார்பில் காலங்கள் வழங்கப்பட்ட போதிலும், அதில் அசமந்த போக்கும் ஏற்பட்டுள்ள காரணத்தினால், இந்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஒரு அரச சட்டவாதியை நியமிக்கும் படியும், அவர் ஊடாக இந்த விடயத்தினை குறித்த மூன்று நாடுகளில் பொருத்தமான ஒரு நாட்டிற்கு அனுப்புவது சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கும் படியும் நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை மீண்டும் அடுத்த மாதம் 4ஆம் திகதி (04.04.2016) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான பிறிமூஸ் சிறாய்வா, ஜெபநேசன் லோகு, எம்.எம்.சபுறுதீன் மற்றும் வீ.எஸ்.நிரஞ்சன், ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Admin
on
March 05, 2016
Rating:

No comments:
Post a Comment