அத்துமீறிய சிங்கள மீனவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட சாள்ஸ் எம்.பி
நாயாறு, கொக்குத்தொடுவாய் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களுடன் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்றொழிளார்களால் முன் வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற அவர்கள், தென்னிலங்கையில் இருந்து வருகை தந்து சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுடன் கலந்துரையாடி, எமது மண்ணில் நீங்கள் தொழில் செய்ய முடியாது உடனடியாக வெளியேறுமாறு கூறியுள்ளனர்.
இது சம்பந்தமாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி சுதாகரனுடன் நேரில் சென்று கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் பணித்தார். அதோடு அரசாங்க அதிபருடனும் நேரில் கதைத்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார்.
<

இது சம்பந்தமாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி சுதாகரனுடன் நேரில் சென்று கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் பணித்தார். அதோடு அரசாங்க அதிபருடனும் நேரில் கதைத்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார்.
<
அத்துமீறிய சிங்கள மீனவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட சாள்ஸ் எம்.பி
Reviewed by NEWMANNAR
on
March 05, 2016
Rating:

No comments:
Post a Comment