போரின் போது காணிகளை கைவிட்டுச் சென்ற மக்கள் காணி உரிமைகளை மீளப் பெறும் புதிய சட்டம் விரைவில்
போரின் போது காணிகளை கைவிட்டுச் சென்ற பொதுமக்கள் தங்களது காணி உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வாரத்தில் இந்த சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தி நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் இடம்பெற்ற காலத்தில் கைவிடப்பட்ட காணிகளுக்கு உரிமை கோரக் கூடிய வகையில் இந்த சட்டம் உருவாக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டம் உருவாக்கப்படும் பட்சத்தில், பத்து வருடங்களுக்கு முன்னதாக கைவிடப்பட்ட காணிகளையும் உரிமை கோர முடியும் என கூறப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய காணிச் சட்டத்திற்கு அமைய பத்து வருடங்களுக்கு கூடுதலாக காணியொன்று கைவிடப்பட்ட நிலையில் இருந்தால் அந்தக் காணியை உரிமை கோர முடியாத நிலைமையே காணப்படுகின்றது. எனினும் புதிய சட்டத்திற்கு அமைய கடந்த 30 வருடங்களாக நாட்டில் காணப்பட்ட போர்ச் சூழ்நிலை காரணமாக கைவிடப்பட்ட காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள இந்தப் புதிய சட்டம் வாய்ப்பளிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் போரால் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய காணிகளை தற்போதைய சட்டத்திற்கு அமைய மீளப்பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உருவாக்கப்படும் புதிய சட்டத்திற்கு அமைய புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களும் நாடு திரும்பும் பட்சத்தில் அவர்கள் தங்களது காணிகளை பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Reviewed by Admin
on
March 30, 2016
Rating:

No comments:
Post a Comment