அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச போதை மாத்திரை வர்த்தகத்துடன் தபால் திணைக்கள அதிகாரிகளுக்கு தொடர்பு

சர்வதேச போதை மாத்திரை வர்த்தகத்துடன் தபால் திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் ஊடாக சிலர் மேற்கொண்டு வரும் சர்வதேச போதை மாத்திரை வர்த்தகத்துடன் தபால் திணைக்களத்தின் சிலருக்கு தொடர்பு உண்டு என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்சூரியவிற்கு அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதியொன்று சுங்கப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாது உரிய கிரம விதிகளுக்கு புறம்பாக அதிவேக தபால் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

போதை மாத்திரை வர்த்தகம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போதை மாத்திரைகள் தபால் பொதியூடாக விநியோகம் செய்யப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவரிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் பெருந்தொகை போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைதான பாகிஸ்தான் பிரஜையான மொஹமட் இர்பான் எதிர்வரும் 1ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சர்வதேச போதை மாத்திரை வர்த்தகத்துடன் தபால் திணைக்கள அதிகாரிகளுக்கு தொடர்பு Reviewed by NEWMANNAR on March 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.