அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இன்று காணாமல் போனோர் விசாரணை ஆணைக்குழு அமர்வு

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வு மன்னாரில் இடம்பெறவுள்ளது.
இந்த விசாரணை அமர்வு நிகழ்வானது மன்னாரில் இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விசாரணை ஆணைக்குழுவின் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ளதால் விசாரணைகளை அதற்கு முன் நிறைவு செய்து விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக இதன் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகள் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூன்று ஆணையாளர்கள் உள்ளடங்களாக தற்போது குறித்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

மன்னாரில் அண்மையில் இடம்பெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகளின் போது, சாட்சியம் வழங்காதவர்களுக்கே சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 257 பேருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

குறித்த விசாரணைகளின் போது கடந்த காலங்களில் மன்னாரில் காணாமல் போன, கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக அதிகளவு விசாரணைகளும், பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



மன்னாரில் இன்று காணாமல் போனோர் விசாரணை ஆணைக்குழு அமர்வு Reviewed by NEWMANNAR on March 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.