அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பஸார் பகுதியில் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கி வந்த 11 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களையும் அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு.

மன்னார் பஸார் பகுதியில் சுகாதார சீர் கேடுகளுடன் காணப்பட்ட 11 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி மன்னார் நீதிமன்றத்தில் மேற்கொண்ட வழக்கு விசாரனைகள் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ராஜா முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக்ககொள்ளப்பட்டது.

இதன் போது கைது செய்யப்பட்ட மன்னார் பஸார் பகுதியில் உள்ள பழ வகைகள் விற்பனை நிலையம்,மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் கூல்பாh போன்ற 11 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

-இதன் போது   குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் ஏற்கனவே எதேனும் வழக்கு விசாரனைகள் உள்ளதா என ஆராய்ந்த நீதிபதி எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாத நிலையில் குறித்த 11 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில் ஒவ்வெரு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு சுகாதாரமற்ற முறையில் வர்த்தக நிலையங்களை நடத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என எச்சரித்து விடுவித்தார்.

-கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார வைத்திய பாரிசோதகர்கள் குழுவினார் மன்னார் பஸார் பகுதியில் உள்ள 17 வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

-இதன் போது சுகாதாரமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட பழ வகைகள் விற்பனை நிலையம்,மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் கூல்பார் போன்ற 11 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவே மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

-குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரனை இன்று செவ்வாய்க்கிழமை மன்றில் இடம் பெற்றது.இதன் போது தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் குறித்த வர்த்தகர்கள் 11 பேரூம் தலா 3 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த மன்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.





-மன்னார் நிருபர்-

-26-04-2016

மன்னார் பஸார் பகுதியில் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கி வந்த 11 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களையும் அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு. Reviewed by NEWMANNAR on April 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.