150 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து : இளம் யுவதி பலி....
பண்டாரவளை-அப்புத்தளை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த காரொன்று, வீதியை விட்டு சுமார் 150 அடி பள்ளத்துக்குள் வீழ்ந்ததில் குறித்த காரில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
22 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும், காரில் பயணித்த தாயும் சகோதரனும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
150 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து : இளம் யுவதி பலி....
Reviewed by Author
on
April 10, 2016
Rating:

No comments:
Post a Comment