பயங்கர தீ விபத்து : 86 பேர் பலி, 350 காயம்....
கேரளத்தின் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவிலில் இன்று அதிகாலையில் 3.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 86 பேர் உயிரிழந்தனர். 350 ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் இச் சம்பவத்தில் கோவிலுக்கு சொந்தமான கட்டடம் முற்றிலும் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
கோவில் திருவிழாவின் போது பட்டாசுகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து நிகழ்ந்த பகுதிக்கு கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி விரைந்துள்ளார்.
தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
பயங்கர தீ விபத்து : 86 பேர் பலி, 350 காயம்....
Reviewed by Author
on
April 10, 2016
Rating:

No comments:
Post a Comment