அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டில் 2000 கோடி அமெரிக்க டொலர் கறுப்புப் பணமாக..!


கடந்த 10 வருட காலத்தில் மாத்திரம் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஊழல்கள் மூலம் பெறப்பட்ட 2000 கோடி அமெரிக்க டொலர் நிதியை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்க வொஷிங்டன் நகரிலுள்ள குலோபல் பினேன்ஷியல் இன்டக்கிரீட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிதி கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இலங்கையிலிருந்து திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள இந்த நிறுவனம் ஊழல் மோசடிகளினால் பெறப்படும் திருட்டுப் பணம் எந்தெந்த நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது என்பதை ஆராயும் ஒரு நிறுவனமாகும். இவ்வாறான திருட்டுத்தனமான வியாபாரக் கொடுக்கல் வாங்கல் மூலம் இலங்கை, 17 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கறுப்புப் பணக் கொடுக்கல் வாங்களில் ஈடுபடும் உலகின் முன்னணி 149 நாடுகளில் இலங்கைக்கு 53 ஆவது இடம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் 2000 கோடி அமெரிக்க டொலர் கறுப்புப் பணமாக..! Reviewed by Author on April 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.