அண்மைய செய்திகள்

recent
-

நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 246 ஆக உயர்வு : 2500 பேர்காயம்...


தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில்நேற்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளதுடன் 2500 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எஸ்மரல்டாஸ், லாஸ் ரியோஸ், மனாபி, சாண்டா எலினா, கயாஸ், சாண்டோ டோமின்கோ உள்ளிட்ட 6 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் அங்கு முழு வீச்சில் நடந்து வருகின்றன. மீட்பு பணியில் 10 ஆயிரம் ராணுவ வீரர்களும், 3,500 பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கம் நடந்த இடத்தில் இருந்து மக்களை மீட்பதற்காக 80 பேருந்துகள் மற்றும் 5 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்பு படையினரால் தேடுதல் பணியில் ஈடுபட இயலவில்லை.

சனிக்கிழமை ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை விட 20 மடங்கு அதிக சக்திவாய்ந்ததாக ஈகுவேடாரில் இருந்ததாக லண்டன் நார்த்ஈஸ்ட் ஓபன் பல்கலைக்கழகத்தில் பிளானிட்டரி ஜியோ சயின்ஸ் துறை ஆராய்ச்சியாளர் டேவிட் ரொத்தேரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 246 ஆக உயர்வு : 2500 பேர்காயம்... Reviewed by Author on April 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.