புகையிரதத்தால் மோதுண்டு உயிரிழந்த 19 வயது யுவதி ; செல்பியால் வீபரீதம்
தண்டவாளத்திற்கு மிகவும் அருகில் நின்றவாறு செல்பி (சுய புகைப்படம்) எடுத்த 19 வயது யுவதியொருவர், ஓடும் புகையிரதத்தால் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விபரீத சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
தென் சீனாவில் பொஷான் என்னும் இடத்தில் அந்த யுவதி மீது புகையிரதம் மோதும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் அந்தப் பிராந்தியத்துக்கு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
மேற்படி புகையிரதப் பாதையானது லியன்தாங் கிராமத்திலுள்ள 33 ஏக்கர் பரப்பளவான ரோஜாப் பூந்தோட்டங்களினூடாக செல்கிறது. அந்தப் பூந்தோட்டங்களைப் பார்வையிட பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் அங்கு விஜயம் செய்வது வழமையாகவுள்ளது.
இந்த விபரீத நிகழ்வு குறித்து மேற்படி பூங்காக்களின் முகாமையாளரான டாய் தெரிவிக்கையில், குறிப்பிட்ட யுவதி சம்பவ தினம் சக மாணவிகள் இருவர் சகிதம் பூங்காவிற்கு விஜயம் செய்து தண்டவாளத்திற்கு மிகவும் அருகில் நின்றவாறு கடந்து செல்லும் புகையிரதத்தை பின்னணிக் காட்சியாக கொண்டு செல்பி புகைப்படம் எடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறினார்.
இதன்போது அந்த புகையிரதம் அவர் மீது மோதியதால் அவர் புகையிரதத்தின் அடியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
புகையிரதத்தால் மோதுண்டு உயிரிழந்த 19 வயது யுவதி ; செல்பியால் வீபரீதம்
 Reviewed by NEWMANNAR
        on 
        
April 13, 2016
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 13, 2016
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
April 13, 2016
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 13, 2016
 
        Rating: 

 
 
 

 
 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment