தடியால் தாக்கி தந்தையை கொன்ற மகள்
தொடங்கொட ருவன்கம பகுதியில் மகள் தந்தையை தடியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
50 வயதான தந்தையின் சடலம் நேற்று இரவு வீட்டுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மீது எசிட் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,26 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலைச்சம்பவம் குடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதாக கருதப்படுவதுடன், பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடியால் தாக்கி தந்தையை கொன்ற மகள்
Reviewed by NEWMANNAR
on
April 13, 2016
Rating:

No comments:
Post a Comment