அண்மைய செய்திகள்

recent
-

நாட்டின் சொத்துக்களை சீனாவுக்கு வழங்குவது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்....


இலங்கையின் சொத்துக்கள் சீனாவுக்கு வழங்கப்படுவதால், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆபத்தில் தள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொண்ட வருவாய் ஈட்ட முடியாத பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக இலங்கை பெரும் கடனில் சிக்கியுள்ளது.

இந்த கடன் சுமையில் இருந்து நாட்டை விடுவித்து கொள்வதற்காக எனக் கூறி தற்போதைய அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றை சீனாவுக்கு வழங்குவதானது நாட்டின் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் தள்ளும் பாரதூரமான நடவடிக்கை என அரசியல் அதவானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் கேந்திர நிலையங்களான துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புடன் பின்னிப் பினைந்துள்ளன.

கடனுக்காக சொத்துக்களை வழங்குவது உலகில் நடைபெறும் வழமையான முறை என்றாலும் சர்வதேச விமான நிலையம் மற்றும் சர்வதேச துறைமுகத்தை உலகில் எந்த நாடும் கடனுக்காக வழங்கியதில்லை என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் சொத்துக்களை சீனாவுக்கு வழங்குவது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.... Reviewed by Author on April 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.