அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் மீண்டும் இராணுவ ஆட்சி! சார்ள்ஸ் எம்.பி சாடல்

வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுகின்றதா? அல்லது ஜனநாயக ஆட்சி நடைபெறுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய வருகை ஆராய்வதற்கு சென்றிருந்த கிராமசேவகர்கள் இன்று தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், இந்த சம்பவத்தினை வன்மையான கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்ப்பட்டுள்ளதாவது,

நல்லாட்சி சிறப்பாக நடைபெறுவதாக கூறிவரும் அரசு தொடர்ந்து வடபகுதி மக்களின் வாழ்வதாதராத்தை நசுக்கிவருகிறது.

கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் எவ்வகையான முயற்சிகளை எடுத்தாலும் அதணை மேற்கொண்டு செல்வதில் பல முட்டுகட்டைகளை நல்லாட்சி அரசு ஏற்படுத்தி வருகின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் மீட்டெழுவதற்கு கூட பொறுத்து கொள்ள இந்த நல்லாட்சி அரசு இணங்கிகொள்ள மறுக்கின்றமை, தொடர்ந்து தமிழர்களை அடிமைபடுத்தும் செயலகவே கருததோன்றுகிறது.

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கு தொடுவாய் என்ற பிரதேசத்தில் புதிதாக தென்பகுதி மீனவர்கள் 20 பேர் அத்து மீறி வருகைதந்துள்ளனர்.

இதனை, அறிந்த கிராமசேவகர் யேசுரெட்ணம் குறித்த பகுதியின் சக கிராம சேவகர்களுடன் சென்றபோது தென்பகுதி மீனவர்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இராணுவத்திற்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில் 593 இராணுவ படைப்பிரிவில் இருந்து வருகை தந்திருந்த இராணுவ கேணல் சமந்த சில்வா என்ற இராணுவ அதிகாரியால் கிராமசேவகர்களின் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள்.

இதணை தாம் வன்மையாக கண்டிக்கின்றேன். அண்மையில் முல்லைத்தீவுக்கு வருகை தந்திருந்த மத்திய கடற்றாழில் அமைச்சர் தென்பகுதி மீனவர்களின் வருகைகை கட்டுபடுத்தவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று புதிதாக 20 தென்பகுதி மீனவர்கள் முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் பகுதிக்கு வந்திருப்பதாக அறிந்த கிராமசேவகர்கள் இது தொடர்பாக ஆராய சென்றபோது இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளனர்.

இது எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது. இப்படியான சம்பவங்கள் எமது வட பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இது வருந்ததக்க விடயம், தமது கடமையின் நிமித்தம்சென்ற கிராம சேவகருக்கே வட பகுதியில் இவ்வாறான நிலையென்றால் சாதாரன பாமர மக்களின் நிலை என்ன?

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராமபுறங்களில் இருக்கின்ற மக்கள் இராணுவத்தினரால் மிக பெரிய துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.

இதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பாக வன்னி பிராந்திய பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியிருக்கின்றேன். இது தொடர்பாக உரியமுறையில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

குறிப்பாக கிராமசேவகர்களை தாக்கிய குறித்த இராணுவ அதிகாரியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்து வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளளேன்.

பொலிஸ்மா அதிபர் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஆனாலும் இக்கோரிக்கை தொடர்பில் எனக்கு நம்பிக்கையில்லை. கடந்த ஏழாம் திகதி இலங்கையிலுள்ள அனைத்து கிராமசேவகர்களுக்கும் சமாதான நீதவான் என்ற அந்தஸ்த்து வழங்கப்பட்டது.

சமாதான நீதவான் வழங்கப்பட்ட மூன்று தினத்திலேயே, முல்லைத்தீவு கிராமசேவகர்களை இராணுவம் மிக கடுமையாக தாக்கியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் எந்த நாட்டில் அல்லது எந்த பிரதேசத்தில் நடக்கிறது என்று தெரியவில்லை, இதுதான் இந்த அரசாங்கத்தின் நல்லாட்சியா? என ஜனாதிபதியிடம் தாம் நேரடியாக கேட்கவுள்ளேன்.

இதேவேளை, இப்படியான சம்பவங்கள் இனிவருங்காலங்களில் நடக்கக்கூடாது என தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் மீண்டும் இராணுவ ஆட்சி! சார்ள்ஸ் எம்.பி சாடல் Reviewed by NEWMANNAR on April 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.