அண்மைய செய்திகள்

recent
-

கல்வியல் கல்லூரியின் பயிற்சிக்காக புதிய மாணவர்கள் தெரிவில் முறைகேடு-சாள்ஸ் நிர்மலநாதன்


கல்வியல் கல்லூரியின் பயிற்சிக்காக புதிய மாணவர்கள் தெரிவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை சம்பந்தமாக வடமாகாண கல்வி அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவசர கடிதம் ஒன்றினை நேற்று அனுப்பிவைத்துள்ளார்

குறிப்பாக மாணவ ஆசிரியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பித்த மன்னார் மாவட்ட விண்ணப்பதாரிகள், தங்களுக்கு சகலவிதமான தகுதிகளும் இருந்தும் தாங்கள் தெரிவு செய்யப்படவில்லையெனவும் அதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லையெனவும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு தீர்வு ஒன்றினை பெற்றுதரும்படி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவது, தற்பொழுது வலயக்கல்வி ரீதியில் கல்வியல் கல்லூரிக்கான ஆசிரியர்களை தெரிவு செய்தல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மன்னார் மாவட்டத்தில் மன்னார், கல்வி வலயத்தில் இயங்குகின்ற பாடசாலைகளில் முக்கிய பாடங்கள் முதல் பல பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.

இருப்பினும் வலயமட்ட ஆசிரியர்களின் இருப்பு கூற்றுப்படி நிறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் இவ்வலயங்களுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் புத்தளப்பகுதியில் மன்னார் வலயத்திற்குட்பட்ட 6பாடசாலைகள் இயங்குகின்றது.

இதில் 60ற்கும் மேற்பட்ட மேலதிக ஆசிரியர்களும் அங்கு கடமையாற்றுகின்றார்கள். இவர்களுடைய இடமாற்றம் அரசியல் ரீதியிலான அணுசரனையினால் இவர்கள் இங்குவர மறுதலிக்கின்றனர்.

இதனால் இவ்வலயத்தில் மாணவர்களுடைய கல்வியில் பல்வேறு சிரமங்கள் எதிர் கொள்ளப்படுகின்றது. இச்சூழலில் வலய ரீதியிலான கல்வியற்கல்லூரிக்கான ஆசிரியர் நியமனங்களில் புதிதாக கல்லூரிக்கு தகுதி பெற்றும் அனுமதிக்கப்படாமல் பல மாணவர்கள் வேதனை கொள்கின்றனர்.

அத்தோடு மன்னார் வலய பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் இயலாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விடையம் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சருக்கு தமது மாவட்டத்தினுடைய நிலைப்பாடு தொடர்பாக நேற்று கடிதம் ஒன்றினை வடக்கு கல்வி அமைச்சருக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, மாணவ ஆசிரியர் பயிற்சி நெறிக்கு விண்ணப்பித்த மன்னார் மாவட்ட விண்ணப்பதாரிகள், தங்களுக்கு சகலவிதமான தகுதிகளும் இருந்தும் தாங்கள் தெரிவு செய்யப்படவில்லையெனவும் அதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லையெனவும் என்னிடம் ஏராளமான முறைப்பாடுகள் செய்துள்ளனர்.

இம்முறைப்பாடுகள் பற்றி நான் விசாரணைகள் மேற்கொண்ட போது இப்பதவிகளுக்கான ஆசிரியர்கள் மன்னார் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிகமாக உள்ளனர் எனவும் அதன் காரணமாகவே பயிற்சி நெறிக்கு விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்படவில்லையெனவும் தெரிய வந்துள்ளது.

மன்னாரில் மிக அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் இம் மேலதிக ஆசிரியர்களுக்கு என்ன நடந்ததென மேலும் விசாரித்தபோது,1990இல் இடம் பெயர்ந்த மன்னார் முஸ்லிம்களின் பிள்ளைகளுக்காக மன்னார் மாவட்ட நிதி ஒதுக்கீட்டில் புத்தளத்தில் இயங்கும் 6 பாடசாலைகளில் அவ்வப்பாடசாலைகளின் ஆளணிக்கு மேலதிகமாக இவர்கள் நியமிக்கப்பட்டு, வேலையெதுவும் இல்லாமலே சம்பளம் பெறுவதாகவும் அறியக்கிடைத்தது.

இது மன்னார் மாவட்டத்தில் ஆசிரிய பற்றாக்குறை காரணமாக ஏற்படும் மாணவர் கல்வி பின்னடைவிற்கு காரணமாகவும் அதேவேளை மன்னார் மாவட்டத்தில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தெரிவு செய்யப்படுவதற்கும் அதன் தொடர்ச்சியாக நியமனத்தை இழப்பதற்கும் காரணமாவுள்ளது.

எனவே இவ்விடயத்தில் உரிய முறையில் தலையிட்டு கீழ்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி வினயமாக வேண்டுகிறேன்.

புத்தளத்தில் மன்னார் கல்வி ஒதுக்கீட்டில் நடைபெறும் பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள மேலதிக ஆசிரியர்களை மன்னாருக்கு இடமாற்றம் செய்தல்

அல்லது மன்னார் மாவட்டத்தில் இருப்பதாக கருதப்படும் மேலதிக ஆளணியை கவனத்தில் கொள்ளாது உண்மையாகவே மாவட்டத்தில் இருக்கும் வெற்றிடங்களை நிரப்ப தேவையான மாணவ ஆசிரியர்களை பயிற்சிக்கு தெரிவு செய்தல்

மன்னார் ஒதுக்கீட்டில் புத்தளத்தில் இயங்கும் பாடசலைகளை மூடி அவற்றை மன்னாரில் பொருத்தமான இடங்களில் அமைத்தல்

இவ்வாறு வடமாகாண கல்வி அமைச்ருக்கு தனது கடிதத்தின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
கல்வியல் கல்லூரியின் பயிற்சிக்காக புதிய மாணவர்கள் தெரிவில் முறைகேடு-சாள்ஸ் நிர்மலநாதன் Reviewed by NEWMANNAR on April 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.