சர்ச்சை தொடர்பில் கூட்டமைப்பினர் முதலமைச்சருடன் அவசர சந்திப்பு!
வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணி வழங்கல் தொடர்பில் குழப்ப நிலை காணப்படுவதுடன் அத்திட்டம் வேறு மாவட்டத்திற்கு செல்லக் கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கான இடத்தினை நகரில் இருந்து 2- 3 கிலோமீற்றர் தூரத்திற்குள் அவ்வமைச்சு கோரியுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் ஓமந்தைப் பகுதியை தெரிவு செய்திருந்தனர்.
அதனை குறித்த அமைச்சு நிராகரித்த நிலையில் தாண்டிக்குளம் விவசாய பண்ணை காணி வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் அக்காணியை வழங்க வடக்கு முதலமைச்சர், வடமாகாண விவசாய அமைச்சர் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், கூட்டமைப்பு பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இடம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையால் குறித்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்லும் நிலையில் உள்ளது.
இதனால் நேற்றைய தினம் மாலை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜா, ம.தியாகராசா, இ.இந்திரராசா, முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் வினோ, அமைச்சர் டெனீஸ்வரனின் இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் வவுனியாவில் கூடி கலந்துரையாடி இருந்தனர்.
இருப்பினும் அதில் தீர்வு எதுவும் எட்டப்படாமையால் இன்று அவர்கள் முதலமைச்சரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறித்த சந்திப்பில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை தொடர்பில் கூட்டமைப்பினர் முதலமைச்சருடன் அவசர சந்திப்பு!
Reviewed by Author
on
April 25, 2016
Rating:

No comments:
Post a Comment