மன்னார் வஞ்சியன்குளம் கிராமத்தில் கணினி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.(படம்)
'நண்பனின் தேவை'நற்பணி மன்றத்தினரால் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வஞ்சியன்குளம் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு கடந்த இரண்டரை மாதம் நடாத்தப்பட்ட கணினி பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த 40 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (17) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றது.
வஞ்சியன்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற சான்றிதல் வழங்கும் நிகழ்வு குறித்த நற்பணி மன்றத்தின் தலைவர் பவமொழி பவன் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பிரதி நிதி ஜஸ்ரின்,சிவன் அறக்கட்டளை நிதியத்தின் தலைவர் கனேஸ் வேலாயுதம்,சமூக சேவையாளர் என்.கனேசலிங்கம்,வஞ்சியன்குளம் பங்குத்தந்தை எஸ்.ஞானாதிக்கம், கிராம சேவையாளர் எம்.ஜெ.பீரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 40 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வஞ்சியன்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற சான்றிதல் வழங்கும் நிகழ்வு குறித்த நற்பணி மன்றத்தின் தலைவர் பவமொழி பவன் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பிரதி நிதி ஜஸ்ரின்,சிவன் அறக்கட்டளை நிதியத்தின் தலைவர் கனேஸ் வேலாயுதம்,சமூக சேவையாளர் என்.கனேசலிங்கம்,வஞ்சியன்குளம் பங்குத்தந்தை எஸ்.ஞானாதிக்கம், கிராம சேவையாளர் எம்.ஜெ.பீரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 40 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மன்னார் வஞ்சியன்குளம் கிராமத்தில் கணினி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 18, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 18, 2016
Rating:

No comments:
Post a Comment