மே தினத்தில் என்ன பொய் சொல்ல போகின்றீர்கள்.?
தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றாது 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் கட்சிகளின் மே தினங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் கறுப்பு மே தினமாக தோட்டங்கள் தோறும் நடாத்த உள்ளோம் என பத்தனை - திம்புள்ள சந்தியில் இன்று பகல் இடம்பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தார்கள்.
சுமார் அரை மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 30ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இம்முறை கொண்டாடப்படும் மே தின விழாவில் மலையக தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் கூறியது போல் 1000 ரூபாய் சம்பள பணத்தை பெற்றுக்கொடுக்க மேதின மேடைகளில் உண்மையான வாக்குறுதியை வழங்க வேண்டும்.
இதைவிடுத்து காலம் காலமாக சொல்லி வந்த பொய்யான கூற்றுக்கள் இம்முறையும் மேடை ஏறும் பட்சத்தில் மேதின விழாவை கறுப்பு கொடிகள் அணிந்து கறுப்பு மேதினமாக தோட்டங்களில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்போவதாக இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம், இவ் ஆர்ப்பாட்டத்தின் போது சில தொழிற்சங்கவாதிகள் பெயர்கள் உச்சரிக்கப்பட்டு கோஷம் எழுப்பப்பட்ட நிலையில் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மே தினத்தில் என்ன பொய் சொல்ல போகின்றீர்கள்.?
Reviewed by NEWMANNAR
on
April 28, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 28, 2016
Rating:


No comments:
Post a Comment