மழை நீரிலிருந்து மின்சக்தியை உருவாக்கும் சோலர் பேனல்...
சூரிய சக்தியானது நம்பகத்தன்மை வாய்ந்ததும், மீள உற்பத்தி செய்யக்கூடியதுமான வளமாகக் காணப்படுகின்றது.
இதன் காரணமாகவே இன்று ஏனைய மின் உற்பத்தி முறைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை காட்டிலும் சூரிய சக்தி மூலமான மின் உற்பத்திக்கு உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகின்றது.
எனினும் இந்த வகையில் மின் உற்பத்தியானது சூரிய ஒளி இருக்கும்போது மட்டுமே பெரிதளவில் கைகொடுக்கக்கூடியவாறு காணப்பட்டு வந்தது.
இவ்வாறிருக்க கிரபீனைப் (Graphene) பயன்படுத்தி மழையின் போதும் மின்னை தொடர்ச்சியாக தரக்கூடிய சோலர் பேனலை உற்பத்தி செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஆரம்பகட்ட பரிசோதனையின் போது சில நூற்றுக்கணக்கான மைக்ரோ வோல்ற் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை மேம்படுத்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மழை நீரிலிருந்து மின்சக்தியை உருவாக்கும் சோலர் பேனல்...
Reviewed by Author
on
April 11, 2016
Rating:

No comments:
Post a Comment