கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்...
மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 24ஆம் திகதி தங்களின் விடுதிகளுக்கு சமூகமளிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, திருகோணமலை வளாகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஒழுக்காற்று குழுவின் விசாரணை அறிக்கை கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 15 மாணவர்களுக்கு குற்றப்பத்திரிகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மாணவர்கள் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமான பதிலை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை வளாகத்தில் முகாமைத்துவ பிரிவு மாணவர்களுக்கும், சித்த மருத்துவ துறை மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து கடந்த மார்ச் 14ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்...
Reviewed by Author
on
April 11, 2016
Rating:

No comments:
Post a Comment