அண்மைய செய்திகள்

recent
-

உறுப்புக்களை விற்று பணம் சம்பாதிக்கும் ஐஎஸ்.தீவிரவாதிகள்.!


ஐஎஸ். தீவிரவாதிகள் தங்கள் பண தட்டுப்பாட்டை பூர்த்தி செய்ய காயமடைந்துள்ள சக தீவிரவாதிகளை கொன்று அவர்களின் உறுப்புக்களை கள்ளச்சந்தையில் விற்று பணம் சம்பாதிப்பதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.

காயமடைந்த வீரர்களின் (தீவிரவாதிகள்) உடலில் இருந்து உறுப்புக்களை எடுக்க வைத்தியர்கள் எச்சரிப்பதாக அரபு மொழியில் ஈராகில் மோசூலில் இருந்து வெளியாகும் அல்-சபா என்ற செய்தித்தாளில் செய்தி வெளியாகி உள்ளது.

மோசூலின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட தோல்வியால் தீவிரவாதிகள் மிகுந்த பண கஷ்டத்தில் இருப்பதால், காயமடைந்த சக தீவிரவாதிகளை கொன்று அவர்களின் இதயம், கிட்னி போன்றவற்றை எடுத்து கள்ளச்சந்தையில் விற்பதாக ஈரானிய செய்தி நிறுவனமான பார்ஸ் தெரிவித்துள்ளது.

மோசூலில் உள்ள ஒரு வைத்தியசாலையின் குறிப்பில் 183 உடல்களில் இருந்து உறுப்புகள் எடுக்கப்பட்டதாக தகவல் உள்ளது.


உறுப்புக்களை விற்று பணம் சம்பாதிக்கும் ஐஎஸ்.தீவிரவாதிகள்.! Reviewed by Author on April 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.