மாணவர் சீருடையை பழைய முறையிலேயே வழங்குங்கள் : ஜனாதிபதிக்கு கடிதம்.....
அடுத்த ஆண்டில் பாடசாலை சீருடைகளை மீண்டும் பழைய முறையின் கீழ் விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரி க்கைவிடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கம் கடிதமொன்றையும் ஜனாதி பதிக்கு அனுப்பிவைத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகையில்
தேசிய அரசாங்கத்தின் கீழ் இவ்வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட வவுச்சர் முறையின் மூலம் சீருடையை பெறும் முறைமையினால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
விலைமனு கோரல் மற்றும் தரமற்ற சீருடைத் துணி விநியோகம் என்பவற்றில் நிலவிய குறைபாடுகள் உள்ளிட்ட விடயங்களை மட்டும் கருத்தில் கொண்டே கல்வி அமைச்சு இப்புதிய முறையினை அறிமுகப்படுத்தியிருந்தது. இருந்த போதிலும் புதிய முறையில் எவ்விதமான வினைத்திறனும் காணப்படவில்லை.
இவ்வாறான நிலையில் 2017 ஆம் ஆண்டில் வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவதற்கு எமது சங்கம் தீர்மானித்தது.
மாணவர் சீருடையை பழைய முறையிலேயே வழங்குங்கள் : ஜனாதிபதிக்கு கடிதம்.....
Reviewed by Author
on
April 23, 2016
Rating:

No comments:
Post a Comment