நுளம்புகளைக் கவர்ந்திழுத்து கொல்லும் விளம்பரப்பலகை.!
பிரேசிலிலுள்ள சந் தைப்படுத்தும் முகவர் நிலையங்கள் நுளம்புகளைக் கவர்ந்து கொல் லும் விளம்பரப் பலகையொன்றை வடிவமைத்துள்ளன.
றியோ டி ஜெனிரோ நகரில் காட்சிப்படுத்தப் பட்டுள்ள அந்த விளம்பரப் பலகையானது லக்ரிக் அமில கலவையொன்றை வெளியிடுகிறது. அந்தக் கலவை மனித வியர்வையின் வாசனையையும் மனித சுவாசத்தின் போது வெளியிடப்படும் காபனீரொட்சைட்டையும் கொண்டுள்ளது.
மேற்படி விளம்பரப் பலகை, அது ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து சுமார் 2.5 கிலோமீற்றர் தூரம் வரையுள்ள நுளம்புகளை தன்பால் கவர்ந்திழுத்து கொல்லும் வல்லமையைக் கொண் டது என அந்த விளம்பரப் பல கையை வடிவமைத்த போஸ் டர்ஸ் கோப் மற்றும் என்.எஸ்.பி. ஆகிய நிறுவனங்கள் உரிமை கோரியுள்ளன.
பிரேசிலில் நுளம்புகளால் பரவும் ஸிகா வைரஸ் நோய் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இந்த விளம்பரப் பலகை அந்நோயின் பரவலை தடுக்க உதவும் என அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்தத் திறந்தவெளி விளம்பரப் பலகை மக்கள் செறிந்து வாழும் மேற்படி பிராந்தியத்திற்கு மேலும் நுளம்புகளை கவர்ந்திழுக்கும் அபாயமுள்ள தாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நுளம்புகளைக் கவர்ந்திழுத்து கொல்லும் விளம்பரப்பலகை.!
Reviewed by Author
on
April 23, 2016
Rating:

No comments:
Post a Comment