அண்மைய செய்திகள்

recent
-

பாம்புகளுடன் நடனமாடிய பாடகி : ராஜநாகம் கடித்து உயிரிழந்த பரிதாபம்...


இந்தோனேசியா நாட்டில் பாம்புகளுடன் மேடையில் பாட்டு பாடியபடி, ஆடிய பெண்ணை ராஜநாகம் கடித்ததில் அவர் மேடையிலேயே உயிரிழந்தார்.

இந்தோனேசியாவிலுள்ள கரவாங் என்ற நகரில் இர்மா ப்ளூ என்ற பிரபல பாடகி, சில தினங்களுக்கு முன்னர் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அவர் கச்சேரிகளில், சிறிய பாம்புகள் முதல் மலைப்பாம்புகளை வரை தனது உடலில் சுற்றிக்கொண்டு நடனமாடியபடி பாடல்களை பாடுவது வழக்கம். இந்நிலையில், மலைப்பாம்பிற்குப் பதிலாக ராஜநாகத்தை பயன்படுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதை ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்ட ராஜநாகத்திற்கு பல் நீக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜநாகத்துடன் மேடையில் பாடிய அவர், கவனக்குறைவால் பாம்பின் வாலை மிதித்துள்ளார்,

இதனால், கோபமடைந்த அந்த ராஜநாகம் பாடகரின் தொடையில் கடித்தது. இதைத் தொடர்ந்து, அவருக்கு திடீரென வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார். அதனால், அதிச்சியடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியசாலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்ததுடன், சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாம்புகளுடன் நடனமாடிய பாடகி : ராஜநாகம் கடித்து உயிரிழந்த பரிதாபம்... Reviewed by Author on April 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.