உலகிலேயே வலிமையான மனிதர் இவர் தான்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்....
கனடா நாட்டை சேர்ந்த கிறித்துவ பாதிரியார் ஒருவர் 3 தீயணைப்பு வாகனங்களை ஒன்றாக 100 அடிகள் தூரம் வரை இழுத்துச் சென்று தற்போது உலக சாதனை படைத்துள்ளார்.
ஓண்டாரியோ மாகாணத்தை சேர்ந்த கெவின் ஃபாஸ்ட்(53)என்ற பாதிரியார் தான் இந்த சாதனையைபடைத்துள்ளார்.
இதே மாகாணத்தில் உள்ள Coburg என்ற நகரில் சில தினங்களுக்கு முன்னர் தனது அபாரமான உடல் வலிமையை காட்டும் போட்டியில் இறங்கினார்.
ஆயிரக்கணக்கான எடைகள் உடைய 3 தீயணைப்பு லொறிகள் ஒன்றாக இணைக்கப்பட்டது. இதனை கயிற்றால் கட்டி இழுக்க வேண்டும் என்பதே போட்டியாகும்.
இவருடன் கனடா நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி பிரபலமும் சேர்ந்துக்கொள்ள இருவரும் லொறிகளை இழுக்க போராடியுள்ளனர்.
இறுதியில், கடுமையான முயற்சியின் காரணமாக சுமார் 100 அடிகள் வரை லொறிகளை இழுத்து கின்னஸ்சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து தொகைக்காட்சி பிரபலம் பேசியபோது, ‘நான்உதவிக்காக மட்டுமே கலந்துக்கொண்டேன்.
லொறியை9 8 சதவிகித முயற்சியில் இழுத்தது எல்லாம் பாதிரியார் தான்’என வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்த சாதனையின் மூலம் கெவின் ஃபாஸ்ட்25-வது முறையாக கின்னஸ் புத்தகத்தில்இடம்பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, போயிங் ராணுவ விமானத்தை 8.8 மீற்றர்கள் தூரம் இழுத்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே வலிமையான மனிதர் இவர் தான்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்....
Reviewed by Author
on
April 26, 2016
Rating:

No comments:
Post a Comment