முதலாளியை தேடி 386 கி.மீ தூரத்தை கடந்து வந்த அதிசய நாய்....
பிரித்தானிய நாட்டில் தன்னுடைய உண்மையான முதலாளியை தேடி 12 நாட்களாக நடந்து 386 கி.மீ தூரத்தை கடந்து வந்து உரிமையாளருடன் சேர்ந்துள்ள அதிசய நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேல்ஸில் உள்ள Penrhyncoch என்ற நகரை சேர்ந்தவர்ஆலன் ஜேம்ஸ். விவசாயியான இவர், தனது பண்ணையில் உள்ள ஆடுகளை கவனித்துக் கொள்ள பெரோ என்ற 4 வயது நாயைவளர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில்,கடந்த மார்ச் மாதம் சிலபயிற்சிகளுக்காக 386 கி.மீ தொலைவில்உள்ள தனது நண்பரின் பண்ணையில் நாயை விட்டுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
Cockermouth என்ற நகரை சேர்ந்த அந்த நண்பரும்நாயை அழைத்துக்கொண்டு ஆடுகளை கவனிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்துள்ளார்.
ஆனால், கடந்த ஏப்ரல் 8ம் திகதிஅந்த நண்பர் ஆலன் ஜேம்ஸை அவசரமாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது,‘என்னிடம் நீங்கள் விட்டு சென்ற நாயை காணவில்லை என்றும், ஏதாவது விபத்தில் சிக்கி இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக’அவர் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ஆலன் தனது செல்லப்பிராணியை தேடுவதற்காக வீட்டை விட்டு வெளியேவந்துள்ளார்.
அப்போது, வீட்டு வாசலில் காணாமல் போன அந்த நாய் இரண்டு கால்களையும் தூக்கிகொண்டு நன்றியுடன் நின்றுக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்துள்ளார்.
நண்பரின் வீட்டிற்கும் தனது வீட்டிற்கும் இடையே உள்ள 386 கி.மீ தொலைவை இந்த நாய் நடந்தே கடந்து வந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் 32 கி.மீ தூரம்என 12 நாட்களாக இந்த நாய் தனது பயணத்தை தொடங்கியிருக்கலாம் என ஆலன் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
முதலாளியிடம் இவ்வளவு விசுவாசமும் பாசமும் வைத்துள்ள எனது செல்லப்பிராணியை இனி யாரிடமும் ஒப்படைக்கமாட்டேன் என ஆலன் ஜேம்ஸ் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
முதலாளியை தேடி 386 கி.மீ தூரத்தை கடந்து வந்த அதிசய நாய்....
Reviewed by Author
on
April 26, 2016
Rating:

No comments:
Post a Comment