அண்மைய செய்திகள்

recent
-

’நீங்க காமராஜர்கிட்ட கேட்டீங்க... நான் உங்ககிட்ட கேக்குறேன்!’ - கருணாநிதியை சீண்டும் சீமான்


பெருந்தலைவரிடம் 65 வயதில் முதலமைச்சர் பதவி வேண்டுமா என்று கேட்டீர்களே, அவருடைய பேரன் கேட்கிறேன், 94 வயதில் உங்களுக்குத் முதலமைச்சர் பதவி தேவையா?" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

திருவாரூரில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரசாரப் பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கினைப்பளார் சீமான் பேசுகையில், "கடந்த ஐந்தாண்டுகளில் கருணாநிதி ஒருமுறையாவது சட்டப்பேரவைக்கு போனாரா? 94 வயதில் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார். நடக்க முடியலை, உட்கார முடியலை, பத்து பேர் பராமரிக்க தேவைப்படுகிறார்கள். எப்படி ஆட்சி செய்யப் போகிறார். வெளிநாட்டுக்காரன் கேட்பான் “That old man is the chief minister of Tamilnadu?”. உங்க வீட்டுல ஒரு தாத்தா இருந்தா என்ன பண்ணுவீங்க? நாட்டுல ஒரு தாத்தா இருந்தால் முதலமைச்சர் பதவியா கொடுப்பீங்க. 65 வயதான பெருந்தலைவர் காமராஜரைக் கேட்கிறார், 'இந்த வயதில் உங்களுக்கு முதலமைச்சர் நாற்காலி வேண்டுமா' என்று. அதற்கு காமராஜர் சொல்கிறார். “அட போப்பா, நீ உட்கார்ந்த நாற்காலியில நான் உட்காருவேனா?” என்று. அந்தப் பெருந்தலைவரிடம் 65 வயதில் முதலமைச்சர் பதவி வேண்டுமா என்று கேட்டீர்களே, அவருடைய பேரன் கேட்கிறேன், 94 வயதில் உங்களுக்குத் தேவையா முதலமைச்சர் பதவி.

பெருந்தலைவர் காமராஜர்தான் இந்த நாட்டில் தூய்மையான நல்லாட்சி நடத்திய தலைவர். அவரையே கல்லூரி மாணவரான தெலுங்கர் சீனிவாசனைக் கொண்டு போய் நிற்க வைத்து தோற்கடித்தார்கள் திமுகவினர். மக்களே சிந்திப்பீர்கள். காமராஜரை சொந்த நிலத்தில் யார் தோற்கடித்தார்களோ, அவர்களை அவர்களின் சொந்த நிலத்தில் தோற்கடிக்க வேண்டும். அப்போதுதான் வரலாற்றில் இந்த நிலம் தாங்கி இருக்கின்ற பெரும்பழி தீரும். ஏய், வஞ்சம் வைத்து தீர்த்தாண்டா தமிழன், தோற்கடிச்சு அனுப்பிட்டாண்டா தமிழன் என்று சொல்லுவதற்கு நீங்கள் வாய்ப்புத் தர வேண்டும்.

ரெண்டுபேரும் மாற்றி மாற்றி தமிழ்நாட்டை வீணாக்கி விட்டார்கள். அம்மா மிக்சி கொடுத்தார், கிரைண்டர் கொடுத்தார், அந்தம்மாவுக்கே எங்கம்மா தாண்டா காசு கொடுத்தது. மக்கள் வரிப்பணம் அது. இதுவரை நடந்ததை எண்ணிப்பார்த்து நீங்கள் வாக்களிக்க வேண்டும். விழுந்த திமுக இனி எழுந்ததாக சரித்திரம் இருக்கக் கூடாது. அதிமுக அதுவே சரிந்து விழும். கருணாநிதியைத் தோற்கடிப்பதில்தான் நமது இனமானம் காக்கப்படும். மே 19ம் தேதி வாக்கு எண்ணும் போது சொந்தத் தொகுதியில் கருணாநிதி தோற்றார் என்கிற செய்தியைக் கேட்கும் போது நான் நினைப்பேன், “என்னுடைய திருவாரூர் அப்பன், ஆத்தா, சித்தப்பன், பெரியப்பன், எல்லாம் உப்பு போட்டு சோறு தின்கிறார்கள் என்று. மானத் தமிழன் இருக்கிறான் என்று.”

உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், உங்கள் பிள்ளை, படிப்பதற்கு பள்ளி இல்லை, படித்தால் வேலை இல்லை, வேலை பார்த்தால் சம்பளம் இல்லை. பிச்சைக்காரன் நிலையில் விட்டீர்கள். இதற்கு ஒரு பரிகாரம்தான் உள்ளது. இதற்கு ஒரே பரிகாரம்தான். எங்கே இந்தக் கொடுமை துவங்கியதோ, அங்கே இதை முடித்திடுங்கள். அதற்கு சரியான வேட்பாளர் தென்றல் சந்திரசேகர். ஒரு திராவிடரை எதிர்த்து இந்தத் தமிழரை வெற்றி பெறச் செய்யவேண்டும்" என்று கேட்டுக் கொண்டு பிரசாரத்தை முடித்தார்.

த.க.தமிழ் பரதன்
’நீங்க காமராஜர்கிட்ட கேட்டீங்க... நான் உங்ககிட்ட கேக்குறேன்!’ - கருணாநிதியை சீண்டும் சீமான் Reviewed by NEWMANNAR on April 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.