அமைச்சரவையை மாற்றுமாறு விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தல்
வட மாகாண நிர்வாகத்தை மாற்றியமைக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தி அவருக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறது.
அமைச்சர்கள் சிலர் அகற்றப்பட்டு புதியவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தி அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்தில் 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். இறுதித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு முன்னர் இந்த விவகாரம் குறித்து மிகக் கவனமாக ஆராயவேண்டிய தேவை தனக்கு இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சர் ஒருவர் தனது பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கும் போது அத்தகைய ஒருவரை அகற்றுவது நேர்மையற்றதாக அமையும் எனவும் அத்துடன் மாகாணத்திற்கு அதிகளவிற்கு பணிகளை செய்யக்கூடிய ஆற்றல் உடைய ஒருவரை உள்ளீர்க்காமல் விடுவதும் அநீதியானதாக அமையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சரவையை மாற்றுமாறு விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தல்
Reviewed by NEWMANNAR
on
April 19, 2016
Rating:

No comments:
Post a Comment