நான்கு இலட்சம் விவசாயிகள் உரமானியத்திற்கு விண்ணப்பம்....
இந்த முறை மேற்கொள்ளப்படவுள்ள சிறு போகத்திற்காக உரமானியத்தை பெற்றுக்கொள்வதற்கு நான்கு இலட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் உரமானியத்தினை பெற்று கொள்ள விண்ணப்பிப்பதற்கு வங்கி கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் சுனில் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி சிறுபோகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் வயலுக்கு 5000 ரூபா வீதம் உரமானியம் வழங்கப்படவுள்ளதாக சுனில் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நான்கு இலட்சம் விவசாயிகள் உரமானியத்திற்கு விண்ணப்பம்....
Reviewed by Author
on
April 11, 2016
Rating:

No comments:
Post a Comment