சிங்களமயமாக்கப்படும் இராவணனின் வெந்நீரூற்று!
இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக, தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தி, உருவாகியதாக வரலாறுச் சான்றுகள் சொல்லும், கன்னியா வெந்நீரூற்று, திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கன்னியா வெந்நீரூற்றுக்கருகாமையில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டன.
தற்போது பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டும் சிவனாலயம் பராமரிப்பு அற்று காணப்படுகின்றன.
மறுமுனையில் திரிபுபடுத்தப்பட்ட பௌத்த வரலாறுகளை இதனுடன் தொடர்பு படுத்தி அரசியல் மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது.
இப்போது இந்து மத அடையாளங்கள் அருகி பௌத்த வழிபாட்டுக்குரிய அடையாளங்களே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது இப்பிரதேசம் தொல்பொருளியல் திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ளது. தற்போது வழங்கப்படும் நுழைச்சீட்டிலே இவை அநுராதபுரகாலத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும், பௌத்த மதத்திற்குரிய பிரதேசத்தில் அமைந்திருப்பதாகவும் தொல்பொருளியல் சான்றுகளால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, கன்னியா வெந்நீரூற்று ஒரு சிங்கள மன்னனால் பௌத்த மதத்துக்குரியதாக அமைக்கப்பட்டதென்றும் அங்கே விகாரையொன்றும் கட்டப்பட்டதாகவும்,போயா தினங்களில் குறிப்பாக வெசாக் பொசன் தினங்களில் நீராடினால் புண்ணிய பலன் கிட்டுவதாக அந்த சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது!
அடுத்த தலைமுறையில் வரலாற்று பாடநூல்களில் இந்த புதிய வரலாறு அச்சிடப்பட்டு இந்துக்களின் வரலாறு மறைக்கப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்விடயம் தற்போது இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியிலும் அதிர்ப்தியினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்களமயமாக்கப்படும் இராவணனின் வெந்நீரூற்று!
Reviewed by Author
on
April 23, 2016
Rating:

No comments:
Post a Comment