அண்மைய செய்திகள்

recent
-

இத்தாலியில் கத்திக்குத்துக்கு இலக்கான இலங்கை இளைஞன்!


இலங்கை இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இத்தாலியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின் குறித்த இளைஞன் உடனடியாக வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞன் 20 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி ரோமில் உள்ள பியாசா கேவரில் வைத்து இனம் தெரியாத ஒரு குழு, குறித்தஇளைஞனை அணுகி கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை தாக்க வந்ததற்கான காரணம் தனக்கு தெரியாது என இளைஞன் பொலிஸாரிடம்தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தாலியில் கத்திக்குத்துக்கு இலக்கான இலங்கை இளைஞன்! Reviewed by NEWMANNAR on April 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.