அண்மைய செய்திகள்

recent
-

உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 100 பேரின் பெறுபேறுகளில் மாற்றம்!


கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 100 பேரின் பெறுபேறுகளின் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில் 61,106 பரீட்சார்த்திகள் பரீட்சை பெறுபேறுகளை மீள் மதிப்பீடு செய்யுமாறு கோரி விண்ணப்பம் செய்திருந்தனர்.

இவ்வாறு மீள்மதிப்பீடு செய்ய கோரி விண்ணப்பித்த 100 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளில் மட்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 100 பேரின் பெறுபேறுகளில் மாற்றம்! Reviewed by Author on April 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.