மன்னார் உதயபுரம் கிராம மாணவி துஸ்பிரையோக விவகாரம்-கைது செய்யப்பட்ட இளைஞன் விளக்கமறியலில் வைப்பு.
மன்னார் உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை துஸ்பிரையோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞனரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று சனிக்கிழமை மாலை உத்தரவிட்டார்.
குறித்த சந்தேக நபரான இளைஞனை நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் பொலிஸார் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த இளைஞனை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவர் அயல் கிராமமான பேசாலை கிராமத்தில் தரம் 5ற்கான மாலை நேர வகுப்பிற்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சென்றுள்ளார்.எனினும் ஆசிரியர் அங்கு இருக்கவில்லை என்பதினால் மாலை நேர வகுப்புக்கள் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியை மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இடத்தில் இருந்து அழைத்துச் சென்று அருகில் இருந்த பாழடைந்த வீட்டில் வைத்து துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த இளைஞரிடம் இருந்து தாப்பிய குறித்த மாணவியான சிறுமி பேசாலை பகுதியில் உள்ள சிலரிடம் தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து உடனடியாக மாணவியின் பெற்றோரினூடாக பேசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பேசாலை பொலிஸார் உடனடியாக குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.பாதீக்கப்பட்ட சிறுமி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனுக்கு எதிராக பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும், குறித்த சம்பவத்தை கண்டித்தும் உதயபுரம் கிராம மக்கள் நேற்று சனிக்கிழமை (23) காலை 5 மணிமுதல் 6.30 மணிவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாங்காலைபாடு சந்தியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
- மன்னார் நிருபர்-
(24-04-2016)

Reviewed by NEWMANNAR
on
April 24, 2016
Rating:

No comments:
Post a Comment