வடக்கை பிரிக்கும் கருத்து தொடர்பில் புதிய பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு....
வடக்கு மாகாணத்தை நாட்டிலிருந்து பிரிப்பது தொடர்பிலான கருத்து பற்றி பொலிஸ்மா அதிபரிடம் சிங்கள ராவய மற்றும் பொதுபல சேனா ஆகிய அமைப்புக்கள் முறைப்பாடு செய்துள்ளன.
புதிய பொலிஸ்மா அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் வடக்கு கிழக்கை இணைத்து தனியான இராச்சியமொன்றை உருவாக்க வேண்டுமென கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரசியல் அமைப்பிற்கு புறம்பாக நாட்டின் இறைமைக்கும் பௌதீக ஒருமைப்பாட்டுக்கும் முரணான வகையில் கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் அழைப்பாளர் மஹால்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கருத்துக்கள் மூலம் பிரிவினைவாத கிளர்ச்சிகள் ஏற்படக்கூடிய கருத்துக்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கை பிரிக்கும் கருத்து தொடர்பில் புதிய பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு....
Reviewed by Author
on
April 22, 2016
Rating:
Reviewed by Author
on
April 22, 2016
Rating:


No comments:
Post a Comment